தீக்குளித்து கணவன்மனைவி உயிரிழப்புமதுவால் வந்த வினைநிர்கதியாய் நிற்கும் 3 குழந்தைகள்!
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 12:23 PM IST | 113
Follow Us

பண்ருட்டி அருகே மது குடித்துவிட்டு, கணவர் தகராறில் ஈடுபட்டதால், மனைவி தீ வைத்துக் கொண்டு, கணவரையும் கட்டி பிடித்ததால், இருவரும் பலியானார்கள். இதனால், மூன்று குழந்தைகள், ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே,
தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர், கூலித்தொழிலாளி அருண். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் அருள், தினசரி குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம், தகராறில் ஈடுபட்டு வந்ததாக
இதே போல், நேற்று முன்தினம் இரவும், அருள் மது அருந்தி வந்துள்ளார். இதனால், முத்துலட்சுமி திடீரென, தனது உடலில், மண்ணெண்ணையை ஊற்றினார். இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த அருள், முத்துலட்சுமியிடம் இருந்த canஐ பிடுங்கி,
தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டார். அப்போது, முத்துலட்சுமி தீக்குச்சியை கொளுத்தியதால், இருவர் மீதும் தீப்பற்றி உள்ளது. வலியால் அலறித் துடித்தபடி, வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு, சிகிச்சை
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி JIPMER மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்,
இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பெற்றோரை இழந்து, மூன்று பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments: 0