திருமணமான ஒரே ஆண்டில் பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 02:44 AM IST | 52
Follow Us

Serial நடிகரான சம்பத் ஜெயராம், அக்னி சாட்சி என்ற கன்னட serialல் நடித்து பிரபலமானார்.
சினிமா வாய்ப்பை தேடி வந்த இவருக்கு, சினிமாவில் சிறு, சிறு கதாபாத்திரங்கள் கிடைத்து வந்தன. இவர் நிலமங்கலத்தில், தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீஸார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவருக்கு, கடந்த ஆண்டு, திருமணமான நிலையில், பட வாய்ப்பு இல்லாததால், மனவேதனையில் இருந்துள்ளார். நல்ல நடிப்பு திறமை இருந்தும், படங்கள் அமையாததால்,
விபரீதமான முடிவை எடுத்துவிட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பத் ஜெயராமுக்கு, முப்பத்தி ஐந்து வயதாகிறது. இந்த சின்ன வயதில், சம்பத் ஜெயராம் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது, கன்னட திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
சம்பத் ஜெயராமன் உடலைக் கண்டு, அவரின் மனைவியும், உறவினர்களும் கதறியது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனவிரக்தியில், இது போன்ற எண்ணம் வரும்போது, தனிமையில் இருப்பதை தவிர்த்துவிட்டு, யாரிடமாவது மனம் விட்டு, இரண்டு நிமிடம் பேசினால், மீண்டும், இந்த எண்ணம், மனதிற்குள் வராது.
Comments: 0