தீவிர சிகிச்சையில் நடிகர் Sarath Babu! தொடர்ந்து கவலைக்கிடத்தில் உடல்நிலை Sarthbabu
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 04:18 AM IST | 59
Follow Us

அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களின் மூலம், ரசிகர்களின் மனதில், நீங்காத இடம் பிடித்த, நடிகர் சரத்பாபு, உடல் நலக்குறைவு காரணமாக, Hyderabadல் உள்ள மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஏழாம் ஆண்டு, பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான நடிகர் சரத்பாபு,
வட்டத்திற்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெத்திக்கண், வேலிக்காரன், அண்ணாமலை போன்ற பல திரைப்படங்களில், hero, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து, முத்திரை பதித்துள்ளார்
கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில், நண்பர் கதாபாத்திரங்களில் நடித்த சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர்
இவர் கடைசியாக, தமிழில், வசந்தமுல்லை என்ற திரைப்படத்தில், நடித்திருந்தார். மேலும், சில சின்னத்திரை தொடர்களிலும், நடித்திருக்கிறார். எழுபத்தி இரண்டு வயதாகும், சரத்பாபு, கிட்டத்தட்ட, ஐம்பது வருடங்களாக, இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில், நடித்திருக்கிறார்
இந்த நிலையில், நடிகர் சரத்பாபு, கடந்த மாதம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடலுறுப்பு நோய், allergy பிரச்சனை காரணமாக, Hyderabadல் உள்ள, தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்
தற்போது, அவரது உடல்நிலை, பின்தங்கி உள்ளதாக, கூறப்படுகிறது. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற, முக்கிய உறுப்புக்களை, பாதிக்கும். நோயால், அவர் பாதிக்கப்பட்டு, உறுப்புக்கள் செயலிழந்து, கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள் தரப்பில், தெரிவிக்கப்பட்டிருக்கிறது
தற்போது, அவருக்கு, ventilator உதவியுடன், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. நான்கு தசாப்தங்களாக, திரைப்படத்துறையில், உச்சத்தில் பணியாற்றிய, நடிகர் சரத்பாபு, தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,
அவர் விரைவில் குணமாக, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், பிரார்த்தனை செய்து வருகின்றனர்
Comments: 0