சீரியல் நடிகையின் அட்டூழியம்… ஸ்கெட்ச் போட்டு நித்யா சசியை தூக்கிய காவல்துறை!!
Written by Ezhil Arasan Published on Jul 28, 2023 | 11:23 AM IST | 70
Follow Us

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர், கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இவருக்கும் பத்தனம்திட்டா மலையாள புழா பகுதியை சேர்ந்த நித்யா சசி (32) என்ற சீரியல் நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டது. வாடகை வீட்டைப் பற்றி விசாரிக்க முதியவர் நித்யாவைச் சந்தித்தார்.
பின்னர் வாடகைக்கு இருப்பதாக கூறி அவரை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, நித்யாவின் உறவினரான பரவூர் கலைக்கோடு பகுதியைச் சேர்ந்த பினு (48) என்பவரும் அவர்களுடன் சேர்ந்தார்.

முதியவர் அதிர்ச்சி அடைய, நித்யாவும் பினுவும் அவரை மிரட்டி ஆடைகளை கழற்ற வைத்தனர். அவர்கள் நிர்வாண முதியவரின் வெளிப்படையான புகைப்படங்களை எடுத்தனர். பின்னர், இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி அவரை மிரட்டி ரூ. 25 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பயந்துபோன அந்த நபர் அவர்களிடம் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்படுவதை தடுக்க ரூ. 11 லட்சம் பணம் கொடுத்தார் . ஆனால், நித்யாவும், பினுவும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.
சிக்கிய முதியவர், நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, கடந்த 18ம் தேதி பரவூர் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, மீதி பணத்தை கொடுப்பது போல் நடித்து, நித்யாவையும், பினுவையும் வீட்டுக்கு வரவழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நித்யாவையும், பினுவையும் கைது செய்தனர்.
கீழே உள்ள செய்திகளைப் பாருங்கள்:
View this post on Instagram
Source – PolimerNews
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0