கோலாகலமாக நடந்து முடிந்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணம்… வைரலாகும் வெட்டிங் க்ளிக்ஸ்!!
Written by Ezhil Arasan Published on Sep 13, 2023 | 18:01 PM IST | 2651
Follow Us

நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடப்பதாக தகவல் வெளியாகியது.

இன்று இவர்களது திருமணம் இரு குடும்பத்தினருடன் நடந்தது. கீர்த்தியின் தங்கையான ரம்யா பாண்டியன், தனது தந்தை மற்றும் அவரது சகோதரியின் கணவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் புதுமணத் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“சிதம்பர ரகசியம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் அருண் பாண்டியன், மேலும் “ஊமை விழிகள்”, மற்றும் “இணைந்த கைகள்” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர். பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
அருண்பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரண பாண்டியன், கீர்த்தி பாண்டியன் என மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள்.

இந்த திருமணமானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக நடந்தது.மேலும் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.
Happy married life my dear Kanmani @iKeerthiPandian ♥️and welcome to our family our dearest Maapilai @AshokSelvan 🤗 pic.twitter.com/dvXXkJe3ma
— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2023
Comments: 0