“போடி…” – தன்னை ட்ரோல் செய்தவருக்கு அசோக் செல்வன் பதிலடி!!
Written by Ezhil Arasan Published on Aug 26, 2023 | 16:05 PM IST | 3786
Follow Us

தன்னை கேலி செய்தவர்களுக்கு நடிகர் அசோக் செல்வன் கடுமையாக பதிலளித்துள்ளார். அசோக் செல்வன் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவர் நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நிற்கும்.

சமீபத்தில் “போர் தொழில்” என்ற படத்தில் நடித்தார், அதில் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். மேலும், படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வரும் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள அருண்பாண்டியின் பண்ணை வீட்டில் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Congratulations to everyone. Extremely happy for #KadaisiVivasaayi . Rightly deserving. But why not nothing for #JaiBhim ? 🤷🏽♂️💔
— Ashok Selvan (@AshokSelvan) August 25, 2023
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதும், அசோக் செல்வன் ட்விட்டரில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார். இதற்கு அவரது பதிவில் ஒருவர் கமெண்ட் செய்து உள்ளார். அதாவது அவர் கூறியது, “நீ பார்க்க நல்லா இருக்க. நல்ல நடிக்கிற. அதோடு நிப்பாட்டு”.
Nee paaka nalaa irrukey , nalaa nadikurey , adhotta nippaattu https://t.co/EnotSPeV5t
— PodiVennai-Get lost Butter (@PodiVennai) August 25, 2023
இதைப் பார்த்து கோபமான அலோக் செல்வன், ‘போடி வெண்ணை’ என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் அவருக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் வருகின்றனர்.
PodiVennai https://t.co/R81Tu6gOOf
— Ashok Selvan (@AshokSelvan) August 25, 2023
Comments: 0