பிரபல நடிகரின் மகளை கல்யாணம் பண்ண போகிறாரா அசோக் செல்வன்?? அதுவும் அடுத்த மாதமேவா??
Written by Ezhil Arasan Published on Aug 12, 2023 | 17:30 PM IST | 4978
Follow Us

‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ படம் பெரிய வெற்றியை கொடுத்தது. சமீபத்தில் இவர் நடித்த ‘போர் தொழில்’ படமும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

தற்போது பிரபல நடிகை ஒருவரை அசோக் செல்வன் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தியை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 13-ம் தேதி நெல்லையில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளன என கூறப்படுகிறது.

முந்தைய நேர்காணலில், அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் கல்யாணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்களது கல்யாணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
Source – Indiaglitz

Comments: 0