ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!
Written by Ezhil Arasan Published on Sep 14, 2023 | 06:24 AM IST | 8009
Follow Us

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான விஜே மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் விமர்சித்தவர்களுக்கு இந்த ஜோடி இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது என்று சொல்லி வந்தனர்.

சமீபத்தில், அவர்கள் தங்கள் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர், ஆனால் அதன் பிறகு, ரவீந்தர் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்என செய்தி வெளியானது.
இவரைச் சுற்றி ஏற்கனவே சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில், திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் பெரும் லாபம் தருவதாக கூறி பாலாஜியை ஏமாற்றியது தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டில் மகாலட்சுமி இருந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால் ஒரு பேட்டியில், ரவீந்தரின் நிலைமை குறித்து பயில்வான் ரங்கநாதன் மோசமாகப் பேசினார். அவர் அந்த வீடியோவில் கூறியது, வீட்டுக்கு மகாலட்சுமியே மருமகளா வந்து இருக்கானு நினைச்சா, ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே என்று அவரது குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.
யூடியூப்பில் பலரை விமர்சித்து வந்த ரவீந்தர், தற்போது புழல் சிறையில் கம்பிகளை எண்ணி வருகிறார். இந்த கைது நடவடிக்கையால் மகாலட்சுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரவீந்தரின் நிலைமையை கடுமையாகப் பேசியதாக பயில்வான் விமர்சனங்களைப் பெற்று வருகிறார். பிரச்சனையில் இருக்கும் ஒருவரை தவறாக பேசுவது சரியல்ல என பலரும் மகாலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Source – Flimibeat
Comments: 0