இந்த பிக்பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள் மட்டுமல்ல, இதுவும் இரண்டு தானாம்… ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!
Written by Ezhil Arasan Published on Aug 31, 2023 | 06:14 AM IST | 1905
Follow Us

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

இந்த சீசனுக்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன, அவை மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த ப்ரோமோவில், இந்த சீசனில் இரண்டு வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியாகிய தகவலின்படி இந்த சீசனில் ஒரு பிக் பாஸ் குரல் மட்டும் இருக்காது, இரண்டு குரல்! இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண் குரல் இருந்து வந்த நிலையில், இந்த முறை பிக்பாஸ் குரலில் ஆண், பெண் குரலும் இருக்கும்.

இரு வீடுகளிலும் உள்ள போட்டியாளர்களுக்கு தனித்தனியாக குரல் ஒலிக்கும். இந்த சீசனில் வேறு என்ன ஆச்சரியங்கள் உள்ளன என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
போட்டியாளர்களைப் பொறுத்தவரை, விஜய் டிவி ஜாக்குலின், நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளரும் நடிகருமான பெயில்வான் ரங்கநாதன், தினேஷ் (கடந்த சீசனில் இருந்தவர்), நடிகர் பிருத்விராஜ், கோயம்புத்தூர் டிரைவர் ஷர்மிளா, செய்தி தொகுப்பாளர் ரஞ்சித் மற்றும் பலர் இணைவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களாக மாகாபா, ஓவியாவும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

Comments: 0