தேசிய விருது… புஷ்பாவை கிண்டல் அடித்த ப்ளூ சட்டை மாறன்!!
Written by Ezhil Arasan Published on Aug 25, 2023 | 15:00 PM IST | 921
Follow Us

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அவர் தனது குழுவுடன் கொண்டாடும் வீடியோக்கள் உள்ளன, மேலும் இந்த வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாக உள்ளன.

ஆனால், ப்ளூ சட்டை மாறன் அல்லு அர்ஜுனை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார், “அவர் என்ன அப்படி நடித்து விட்டார்”. இந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்து தமிழ் சினிமா நடிகர்களையும், ப்ளூ சட்டை மாறனையும் கமெண்ட் போட்டு விளாசி வருகின்றனர்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை 2011ம் ஆண்டு பல நல்ல படங்களில் நடித்து பல நடிகர்கள் போட்டிப் போட்ட நிலையில், அனைவரையும் வீழ்த்தி விட்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக வென்றுள்ளார்.
ஜெய்பீம் படத்தில் மணிகண்டன், கர்ணன் படத்தில் தனுஷ், சர்ப்பட்ட பரம்பரையில் ஆர்யா போன்ற நடிகர்கள் வெற்றி பெறுவார்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

தெலுங்கு திரையுலகில், இதுவரை எந்த நடிகரும் இந்த விருதை வென்றதில்லை, எனவே அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இது ஒரு பெரிய விஷயம்.
இந்நிலையில், “ஐயா உங்களுக்கு இதயமே இல்லீயா” என ப்ளூ சட்டை மாறன் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கியதை கிண்டல் அடித்து அல்லு அர்ஜுன் ரசிகர்களை கடுப்பாகி உள்ளார்.

அல்லு அர்ஜுனை ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்த நிலையில், “பின்ன வலிமை அஜித்துக்கா கொடுப்பாங்க” என அல்லு அர்ஜுன் ஆர்மி கிண்டல் செய்ய, அஜித்துக்கு சப்போர்ட் பதிலாக, “நீ வாலி, முகவரி எல்லாம் பார்த்தது இல்லையா” என ப்ளூ சட்டை மாறன் கமெண்ட் போட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர் இல்லை என எப்படி சொல்லலாம் என அல்லு அர்ஜுன் ஆர்மி ப்ளூ சட்டை மாறனை வறுத்து எடுத்து வருகின்றன.
ஏன் நீ வாலி, முகவரி எல்லாம் பாத்ததே இல்லையா?
— Blue Sattai Maran (@tamiltalkies) August 24, 2023
Comments: 0