ஜெயிலர் கிளைமாக்ஸில் சென்சார் தூக்கிய 10 செகண்ட் சீன்… செம மாஸா இருந்திருக்குமே!!
Written by Ezhil Arasan Published on Aug 14, 2023 | 17:50 PM IST | 2408
Follow Us

பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான புதிய திரைப்படம் ‘ஜெயிலர்’. இது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எடிட்டர் நிர்மல், படத்தின் கிளைமாக்ஸ்யில் ரஜினிகாந்த் சுருட்டு பிடித்து விநாயகனை கொல்லும் காட்சியை தொடர்ந்து 10 செகண்ட் மாஸ் காட்சி ஒன்று இருந்தது என்றும் ஆனால் அந்த காட்சியை சென்சார் கட் நீக்கிவிட்டதாகவும், அது வேற லெவல் மாஸ் காட்சி என்றும் எடிட்டர் நிர்மல் கூறியுள்ளார்.

‘ஜெயிலர்’ படம் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட காட்சி விரைவில் வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நீக்கப்பட்ட காட்சியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – SS Music
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0