மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!
Written by Ezhil Arasan Published on Sep 20, 2023 | 17:34 PM IST | 5137
Follow Us

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் செய்த செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்வின் போது, தொகுப்பாளினி அவரை பேச அழைத்தார், ஆனால் அவர் பேசாமல், தொகுப்பாளினி கழுத்தில் மாலையை அணிவித்து ஆச்சரியப்படுத்தினார். இது தொகுப்பாளினியை மிகவும் கோபப்படுத்தியது.n’எல்லோருக்கும் மாலை போட்டிங்க.. நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?” என கூல் சுரேஷ் காரணம் கூறினாலும் இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக மன்சூர் அலிகான் நன்றி தெரிவிக்க வந்த போது அவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளர் கூல் சுரேஷ் இப்படி நடந்துக் கொள்ளலமா? என கேள்வியெழுப்பினர். கூல் சுரேஷ் செய்தது தவறு என்று கூறிய மன்சூர் அலிகான், அவர் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், கூல் சுரேஷ் வேறு விளக்கம் அளித்துள்ளார்.இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி ‘நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என பதில் அளித்துள்ளார். தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி’ அவர் மன்னிப்புக் கேட்டு, வருந்துகிறேன் என்று கூறி பிரச்சினையை முடிக்க முயன்றார், ஆனால் பலர் அவரது செயலை இன்னும் கடுமையாக ஏற்கவில்லை.
Comments: 0