‘எதிர்நீச்சல்’ நடிகர் மாரிமுத்துக்கு கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது குறித்து உடனிருந்த சீரியல் நடிகர் உருக்கம்!!
Written by Ezhil Arasan Published on Sep 08, 2023 | 05:40 AM IST | 5466
Follow Us

பிரபல நடிகரும், இயக்குனருமான, ‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சியின் முக்கிய கதாபாத்திரமான ஜி மாரிமுத்து எதிர்பாராதவிதமாக காலமானார். அவரது மரணம் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘எதிர்நீச்சல்’ நடிகர் மாரிமுத்து குறித்து கடைசி நிமிடங்களில் உடனிருந்த சீரியல் நடிகர் கமலேஷ் கூறியுள்ளார். அவர் கூறியது அதாவது, “காலை வந்தாரு, அவர் டப்பிங் செய்தார் அது முடிந்தது. நான் அடுத்த டப்பிங் செய்ய வேண்டும், நானும் அங்கே இருந்தேன். திடிரென்று பாதி வழியை முடித்துவிட்டு வெளியே வந்து ரொம்ப சோஃபாகேஷன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
அங்கிருந்து அப்படியே அவர் சூர்யா ஹாஸ்பிடல், எங்களிடம் கூட சொல்லாமல், அவனே காரை ஓட்டிக்கொண்டு இங்கிருந்து கிளம்பினார்.

அவர் இறங்கும்போதே, ரொம்ப ஒரு மாரி ஆயிருக்காரு. அதுக்கப்புறமா, உள்ள இங்க மருத்துவமனையில் இருக்கிறவங்க, உள்ள சேத்து இருக்காங்க. பண்ணதுக்கு அப்புறமா, ஒடனே அவர் காலமாகிவிட்டார்”.
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து, 2008ல் ‘கண்ணும் கண்ணும்’, 2014ல் ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கியவர். பின்னர், சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த கதாபாத்திரத்தில் இவர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி சமூகங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி நிமிடங்களில் உடனிருந்த சீரியல் நடிகர் உருக்கம்
Marimuthu Passed Away | #Marimuthu | #Ethirneechal pic.twitter.com/ifz7nIw4yI
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 8, 2023
Comments: 0