ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த சண்டை!!
Written by Ezhil Arasan Published on Jul 29, 2023 | 03:52 AM IST | 63
Follow Us

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் “ஜெயிலர்”, தயாரிப்பாளர்கள் சமீபத்தில் சென்னையில் ஒரு பெரிய ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினர்.

“ஜெயிலர்” படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், சிவ ராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தமன்னா நடித்துள்ள “காவாலா” பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, ஷில்பா ராவ் பாடிய இந்த பாடல் பெரிய ஹிட் ஆகியது.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவின் பொது, சிபாரிசில் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவுக்கு வரிசையாய் வந்த விஐபிக்கள். ஆனால் காவல்துறை உளளே விட வில்லை. இதையடுத்து பாஸ் இல்லன்னா என்ன அவங்கள உள்ளே அனுப்புங்க என போலீசாரிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்ட ரஜினிகாந்த்தின் பிஆர்ஓ.
“ஜெயிலர்” தவிர, ரஜினிகாந்த் தனது அடுத்த படமான “லால் சலாம்” படத்திலும் நடித்து வருகிறார். அதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாயாக கேமியோவில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Polimer News
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0