எதிர்நீச்சல் குணசேகரன்-னை பிளான் பண்ணி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ!!
Written by Ezhil Arasan Published on Aug 18, 2023 | 05:44 AM IST | 1302
Follow Us

சன் டிவியை விட விஜய் டிவி பலவிதமான நிகழ்ச்சிகளைக் காட்டி பிரபலமடைய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அவர்கள் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திறமை நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒளிபரப்புகிறார்கள். ஆனால் அவை இன்னும் சன் டிவி போல பிரபலமாகவில்லை.

தற்போது, சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் பார்வையாளர்களைப் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குணசேகரன் நடித்த கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அதனால் குணசேகரனை எப்படியாவது நம்ம பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று பல திட்டங்களில் விஜய் டிவி செயல்பட்டது. ஆனால் அவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், விஜய் டிவி ஒரு திட்டத்தை வகுத்து, குணசேகரனை காமெடி ஷோவில் நடிக்க வைக்க முடிவு செய்தது.

“ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4” என்று அழைக்கப்படும் இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும். குணசேகரன் மற்றும் நாடகத்தில் அவரது அம்மா வேடத்தில் நடிக்கும் விசாலாட்சியும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் குணசேகரனை பார்க்கும் பொழுது இத்தனை நாளாக சீரியஸ் ரோலில் நடித்தவர் தற்போது பாட்டின் மூலம் டிஜே பிளாக் கலாய்ப்பது அப்பாட்டமாக தெரிகிறது. முக்கியமாக இவரை காமெடியாக காட்டி ரசிகர்கள் அனைவரும் சிரிக்கும் படியாக பிரியங்கா வச்சு செய்கிறார்.

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Vijay Television
கடைசியில் நம்மளை கலாய்க்கிறார் என்று தெரிந்த குணசேகரன் ஏன் இந்த அம்மா என்ற டயலாக் யார கலாய்க்கிற என்று மிரட்டுகிறார். என்கிட்டயா கொஞ்சம் பார்த்து பாட்டை போடுங்க என்று டயலாக் பேசுகிறார். உடனே அங்கே இருந்து அதற்கும் பதிலாக நான் இல்லைங்க மன்னிச்சிடுங்க என்று குரல் வந்தது. கடைசியில் பிரியங்கா, குணசேகரன் சார் வந்து இருக்காங்க கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க என்று கூறியுள்ளார்.
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0