ஹோட்டல் ரூமில் வைக்கப்பட்ட ரகசிய கேமிரா… ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின் பரபரப்பு தகவல்!!
Written by Ezhil Arasan Published on Aug 23, 2023 | 04:58 AM IST | 484
Follow Us

ஜிவி பிரகாஷ்-டன் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெங்களூரில் உள்ள ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகர், நடிகைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து பிரபலமான மற்றும் சொகுசு விடுதிகளில் தங்குவார்கள். ஆனால், சில ஹோட்டல் ஊழியர்கள் ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜி.வி.பிரகாஷின் ‘ப்ரூஸ்லீ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை க்ரித்தி கர்பண்டா, கன்னட படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், தனது அறையில் ரகசிய கேமராவில் வைத்ததையும்
பகிர்ந்துள்ளார்.அந்த ரகசிய கேமரா கண்டுபிடித்து விட்டு உடனடியாக அந்த ஓட்டலை விட்டு வெளியேறினேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் மறைக்கப்பட்ட கேமராக்களை எப்போதும் சோதிப்பதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments: 0