ஜவான் படம் எப்படி இருக்கு?? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!
Written by Ezhil Arasan Published on Sep 07, 2023 | 16:56 PM IST | 4075
Follow Us

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் புதிய திரைப்படமான “ஜவான்” இன்று வெளியாகியுள்ளது, இணையத்தில் உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவர். இது ஷாருக்கானுடன் அவர் நடித்த முதல் பாலிவுட் படம், மேலும் இது பாசிடிவ் விமர்சனங்களைப் பெறுகிறது.
ஆக்ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, எமோஷன் என எல்லாத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி பதிவிட்டு வருகின்றனர்.

ஷாருக்கானுக்கு “ஃபேன்” மற்றும் “ஜீரோ” போன்ற சில சமீபத்திய திரைப்படங்கள் தோல்வியடைந்தன, எனவே அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக சுமார் நான்கு ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்தார்.
இந்த வருடம் அவர் நடித்த “பதான்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது, “ஜவான்” படமும் ஹிட் என்றும், 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#JawanReview #Jawan: BLOCKBUSTER
Rating: ⭐️⭐️⭐️⭐️
Star power, Style, Scale, Songs, Soul, substance & surprises ( Cameos ) & most importantly SRK who’s back again with a vengeance Mass 💥🔥 Will be the second Blockbuster of SRK in 2023. அட்லீ அண்ணா நீ ஜெயிச்சுட்ட 😍 pic.twitter.com/WY2IqAZdFv— கூண்டுக்கிளி (@_uvt_) September 7, 2023
இதனால் திரையரங்குகளை ஹோலி பண்டிகைக் களமாக மாற்றி வண்ண பொடிகளை தூவி கொண்டாடி வருகின்றனர் ஷாருக்கான் ரசிகர்கள். இன்னும் சில வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் தொடரும் என என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமடைந்துள்ளார், மேலும் ஷாருக்கானின் வெற்றியை ரசிகர்கள் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#Jawan [4/5]
Masterpiece
One of the best movie of @iamsrk💥. That father character is most powerful🔥
Story wise it's a strong movie. @Atlee_dir introduced new Bollywood world. Emotional scenes👌. Stunts and GG works are superb@anirudhofficial is another hero. What a BGM💥
— Tracker Ramya™ (@IamRamyaJR) September 7, 2023
இப்போ தான் ஜவான் படத்தை பார்த்து முடித்தேன், ஷாருக்கான் நிறைய கெட்டப்புகளில் தனது மொத்த நடிப்பையும் இந்த ஒரு படத்தில் இறக்கி இருக்கிறார். இன்கிரெடிபிளான அவரது நடிப்பை பார்த்து விட்டு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என ரசிகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ஒரு பாலிவுட் விமர்சகர், சுமித் கேடல், ட்விட்டரில் படத்தைப் பாராட்டினார், இது ஒரு பெரிய பிளாக்பஸ்டர் என்றும் அதற்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இப்படியொரு படம் பாலிவுட்டுக்கு சீக்கிரம் தேவையாக இருந்த நிலையில், ஷாருக்கான் அந்த சம்பவத்தை செய்துள்ளார் என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
Congratulations dear @iamsrk 💐#Jawan – GIGANTIC BLOCKBUSTER 🔥 #JawanDay #JawanFDFS pic.twitter.com/rvtxAc4zCJ
— AK (@iam_K_A) September 7, 2023
Comments: 0