ஹிட் இயக்குநரை கழட்டி விட்ட ஹரிஷ் கல்யாண்… கல்யாணம் ஆனவுடன் கவின்-க்கு அடித்த ஜாக்பாட்!!
Written by Ezhil Arasan Published on Aug 28, 2023 | 17:19 PM IST | 451
Follow Us

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அந்த போஸ்டர்களில் ஹரிஷ் கல்யாண் அவர் சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என ஸ்டார் நட்சத்திரங்களை போல கெட்டப் போட்டு இருந்தார். ஆனால் தீடீரென ஹரிஷ் கல்யாண் படத்தை விட்டு வெளியேறினார்.

ஹரிஷ் கல்யாண் அமலா பாலுடன் சிந்து சமவெளி படத்தில் தனது நடிப்பைதொடங்கினார், ஆனால் அவருக்கு அதிக திரைப்படகள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, ஆரவ் மற்றும் ஓவியா இடையேயான காதல் கதைகள் ஒருபுறமும், ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் மறுபுறமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற காதல் திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, எலன் என்ற புதிய இயக்குனர் இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

இப்போது, ஹரிஷ் கல்யாண் மீண்டும் எலனுடன் ‘ஸ்டார்’ இல் பணியாற்ற வேண்டும், ஆனால் அவர் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். அதன்பிறகு, தோனி தயாரித்த ‘எல்ஜிஎம்’ என்ற படத்தில் நடித்தார், ஆனால் அந்த படம் அட்டு ஃபிளாப் ஆகி விட்டது.
‘டாடா’ வெற்றிக்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட நடிகர் கவின், யுவன் ஷங்கர் ராஜா, எலன் கூட்டணியுடன் புதிய படத்துக்கு தயாராகி வருகிறார். இந்த கூட்டணியுடன் நடிக்கப் போகும் படத்தை சிமபலிக்காக கைகளில் ஸ்டார் போட்டுக் காட்டியுள்ளார்.

கவின் படத்தின் தலைப்பை இன்று மாலை வெளியிட உள்ளார், மேலும் சில ரசிகர்கள் இது ஹரிஷ் கல்யாண் விட்டு சென்ற அதே ‘ஸ்டார்’ படமாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றன. இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இது குறித்து தெரிய வரும்.
"The universe always falls in love with a stubborn heart" – JM STORM
Anybody who knows me personally will know how special this is for me.
Thank you yuvan sir @thisisysr 🙏🏼♥️
Thank you elan @elann_t 🤜🏼Happy to be joining hands with @riseeastcre @SVCCofficial @Pentelasagar… pic.twitter.com/j3Syp9rusw
— Kavin (@Kavin_m_0431) August 27, 2023
Comments: 0