அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!
Written by Ezhil Arasan Published on Sep 19, 2023 | 18:18 PM IST | 2733
Follow Us

அனிருத் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர். நடிகர் தனுஷ்யின் ‘3’ என்ற திரைப்படத்தின் மூலம் அனிருத் இசையமைக்க தொடங்கினார். அவர் தமிழ் படங்களுக்கு இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் மக்கள் விரும்பினர்.

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ‘ஜவான்’ என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது அவருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். அதற்கு அவர், “அது தவறான செய்தி. அனிருத் எனக்கு நல்ல நண்பர், நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடவில்லை” என்றார்.

மேலும் திருமணம் குறித்து எழுந்த கேள்விக்கு ‘திருமணம் நடக்கும்’ என்று மட்டுமே தெருவித்துள்ளார் கீர்த்தி. இதன்மூலம் அனிருத்துடன் திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கீர்த்தி மற்றும் அனிருத் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments: 0