லிங்குசாமி தண்டனை வழக்கில் – அதிரடி உத்தரவு Lingasamy Madras High Court
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 02:53 AM IST | 160
Follow Us

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும், அவரது சகோதரருக்கு, விதிக்கப்பட்ட, ஆறு மாதங்கள், சிறை தண்டனையை, நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. கடந்த, இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு, நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில், எண்ணி ஏழு நாள் படத்தை, தயாரிப்பதற்காக,
PVP capital நிறுவனத்திடமிருந்து, ஒரு கோடியே மூன்று லட்ச ரூபாய் தொகையை, திருப்பதி brothers நிறுவனத்தின் பங்குதாரர் என்கிற முறையில், இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர், கடனாக பெற்றுள்ளனர்
வாங்கிய கடனுக்காக, லிங்குசாமி கொடுத்த, ஒரு கோடியே, முப்பத்து ஐந்து லட்ச ரூபாய்க்கான, காசோலை, வங்கியில், பணம் இல்லாமல், திரும்பியதால், PVP நிறுவனம், தரப்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை மோசடி வழக்கு, தொடரப்பட்டது. இந்த வழக்கை, விசாரித்த, சைதாப்பேட்டை நீதிமன்றம்,
இருவருக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், சிறை தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும், இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதர சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர்
இந்த வழக்கு, நீதிபதி V சிவஞானம் முன்பு, விசாரணைக்கு வந்த போது, காசோலை தொகையில், இருபது விழுக்காடு, ஏற்கனவே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், வைப்புத் தொகையாக, செலுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போது, மேலும், இருபது விழுக்காட்டை, வைப்புத் தொகையாக செலுத்த, தயாராக இருப்பதாகவும்,
லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருபது விழுக்காட்டு தொகையை, ஆறு வாரங்களில், வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்து, ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உத்தரவிட்டார்
Comments: 0