பாவம் இந்த புள்ளைக்கு யாராவது வாய்ப்பு கொடுங்களேன் – லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
Written by Ezhil Arasan Published on Aug 12, 2023 | 11:10 AM IST | 616
Follow Us

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா தமிழகத்தில் பிரபலமானார். இவர் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அவருக்கு காதல் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவின. நிகழ்ச்சி முடிந்த பிறகும், அவரது காதல் வாழ்க்கையைப் பற்றி நிறைய கிசுகிசு இருந்தன. அவளும், கவினும் தனித்தனியாக சென்றதை மக்கள் அறிந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே உண்மையில் என்ன நடந்தது? கவின் குழப்பத்தில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு விஷயங்களை தெளிவுபடுத்தினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரியின் படத்தில் லாஸ்லியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, லாஸ்லியா “சிங்”, அர்ஜுன் நடித்த “பிரண்ட்ஷிப்” ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். “பிரண்ட்ஷிப்” படத்தின் படப்பிடிப்பு ஆரி படத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. “பிரண்ட்ஷிப்” படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

ஆனால், பலரும் நினைத்தது போல் “பிரண்ட்ஷிப்” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். மலையாளத்தில் “அன்ட்ரீத் குஞ்சப்பன்” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதே படம் தமிழில் பெரும் தோல்வியை தழுவியது.
லாஸ்லியா படும் தோல்வியை தொடர்ந்து தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக உடல் எடையை குறைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார்.

சமீபத்தில் லாஸ்லியா மிகவும் ஸ்டைலான ஆடைகளை அணிந்துள்ளார். அவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் உன் பப்லி லுக் தான் அழகு, நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது எனவும், வாய்ப்பிற்காக இப்படி இறங்கிவிடீர்களா என்றும் கமண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

சில கமெண்ட்ஸ் கிழ பாருங்கள்:
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0