கவின்-யின் கல்யாண அறிவிப்பால், லாஸ்லியா என்ன ரியாக்ட் செய்தார் தெரியுமா??
Written by Ezhil Arasan Published on Aug 02, 2023 | 17:20 PM IST | 65
Follow Us

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி தொடரில் வேட்டையனாக நடித்து பிரபலமான நடிகர் கவின் நேற்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த செய்திக்கு அவரது முன்னாள் காதலி லாஸ்லியா எப்படி பதிலளித்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின், பின்னர் ஹீரோவாக அறிமுகமான “நட்புனா என்னன்னு தெரியுமா” படம் சரியாக வரவில்லை. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். நிகழ்ச்சியின் போது, அவர் தனது சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார், மேலும் அவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் நடந்தன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில கருத்து வேறுபாடுகளால் அவர்களது காதல் முறிந்தது.
பிரிந்த பிறகு, கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் தங்கள் நடிப்பு வாழ்க்கையில் பிஸியாகிவிட்டனர். கவின் படங்களில் ஹீரோவானார், லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது.

கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வந்தன.இந்த செய்தி வந்த நிலையில்அதே சமயத்தில் நடிகை லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டு, அதன் பின்னணியில் ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற பாடலை போட்டு உள்ளார். அவர் கவினின் கல்யாணம் குறித்து தெரிந்து தான் இப்படி சூசகமாக ரியாக்ட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் சில புதிய புகைப்படங்களையும் வெளியிட்டார், இதற்கு கமெண்ட் செக்ஷன் முழுவதும் கவினின் கல்யாணம் பற்றிய கமெண்ட்டுகள் தான் நிரம்பி வழிகின்றன. சிலர் கவினின் கல்யாணத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க, ஒரு சிலரோ, கவினை மிஸ் பண்ணிவிட்டீர்களே என சொல்லி அவரை கடுப்பு ஏத்தும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கீழே உள்ள லாஸ்லியா பதிவை பாருங்கள்:

கீழே உள்ள நெட்டிசன்களின் கமெண்ட்ஸ் பதிவை பாருங்கள்:
Comments: 0