“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!
Written by Ezhil Arasan Published on Sep 15, 2023 | 17:44 PM IST | 2919
Follow Us

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை, ஆனால் ட்ரெய்லர் அனைவரையும் ரசிக்க வைத்தது.

இருப்பினும், படத்தின் வெளியீட்டில் சில கடைசி நிமிட சிக்கல்கள் இருந்தன, இது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கவலையில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் சிக்கல்களைத் தீர்க்க முடிந்தது, மேலும் மார்க் ஆண்டனி வெற்றிகரமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
தற்போது, படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வருகின்றனர், மேலும் விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது, மேலும் அவர் ஒட்டு மொத்த படத்தையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார் என புகழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக சில தோல்விகளை சந்தித்து வரும் விஷால் “மார்க் ஆண்டனி” செமயா ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

சிலுக்கு டான்ஸ், டைம் ட்ராவல் கான்செப்ட், இடைவேளை காட்சி, மற்றும் பரபரப்பான க்ளைமாக்ஸ் என எல்லாம் ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் இருக்கிறது. திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு படத்தில் உள்ள நகைச்சுவை ஒரு பெரிய காரணம்.
#MarkAntony – ‘PASS’ Antony!
AVG 1st Hlf, FUN 2nd Hlf.
SJ Suryah🔥
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 15, 2023
Climax Vishal👏#MarkAntony pic.twitter.com/CX3VqiU1qL
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 15, 2023
பின்னணி இசையில் சில சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் ஆகியோரின் நடிப்புத் திறமை படத்திற்கு ரசிகர்களிடம் வெற்றி பெற்றுள்ளது.
#MarkAntony Fun max 🔥
SJ.Suryah the show stealer… 💥
Mark Antony 🤜🤛 Jackie/Madhan Pandiyan
Lot of fun theatrical moments
Sure Shot 👍
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 14, 2023
Comments: 0