விஷாலிடம் கெஞ்சி மயி** கூட படம் பண்ண மாட்டேன்.. மீண்டும் பொது இடத்தில் அசிங்கமாக பேசிய மிஸ்கின்!!
Written by Ezhil Arasan Published on Aug 09, 2023 | 07:14 AM IST | 475
Follow Us

மேடையில் பேசும்போது அநாகரிகமாக பேசும் பழக்கம் மிஸ்கினுக்கு உண்டு. சமீபத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடியே படத்துக்காக நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது குறித்து பரபரப்பாகி வருகிறது . துப்பறிவாளன் படத்தில் விஷாலும், மிஸ்கினும் இணைந்து நடித்துள்ளனர்.

அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் போது மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சனைகள் ஆரம்பித்தன. மிஸ்கின் விஷாலை பொறுக்கி பையன் என வெளிப்படையாக விமர்சித்தார். அடியே பட திரைப்பட விழாவில் இதனைக் குறிப்பிட்டு , தன்னையறியாமலேயே அவ்வாறு கூறியதாக விளக்கமளித்துள்ளார்.
அதாவது விஷால் தனக்கு இதயத்திற்கு நெருக்கமான நபர் நெருங்கிய நண்பரைப் போல முக்கியமானவர் என்று மிஸ்கின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்போது மிஸ்கின் பற்றி விஷாலிடம் கேட்டால், மிஸ்கின் துரோகம் செய்துவிட்டார் என்று தான் கூறுவார் சொல்லலாம். விஷாலுக்கு என்ன துரோகம் செய்தான் என்று உண்மையில் புரியவில்லை. இருந்தாலும் விஷாலின் அனைத்து படங்களும் நன்றாக வரவேண்டும் என்று தன நான் நினைப்பேன்.

எனக்கும் விஷாலுக்கும் சில சமயம் கருத்து வேறுபாடுகள் வருவது உண்மைதான். விஷாலுக்கு பெரிய ஈகோ இருப்பதாகவும், சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் மிஸ்கின் சுட்டிக்காட்டினார். மிஸ்கின் ஏன் விஷாலைப் பற்றி இப்படிப் பேசுகிறார் என்று பத்திரிக்கையாளர்கள் எழுத ஆரம்பித்து விடுவார்கள். மீண்டும் விஷால் படத்தை எடுக்க மிஸ்கின் இப்படி செய்கிறார் என்று கூட நினைக்கலாம்.
விஷாலுடன் படம் பண்ண நான் ஐஸ் வைக்கணும் என ஒரு துளி கூட எண்ணம் இல்லை. விஷால் இடம் கெஞ்சிலாம் இந்த மயி** எல்லாம் பண்ணவே மாட்டேன் என அடியே பட திரைப்பட விழாவில் அவதூறாக மிஸ்கின் பேசியிருக்கிறார்.

விஷாலை நான் பொறுக்கி சொன்னதால் எல்லோரும் இதே பேரை வைத்த அவரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். தயவு செய்து இனி யாரும் அப்படி கூப்பிட வேண்டாம் என்று மிஸ்கின் கூறியுள்ளார். மிஸ்கின் பேசிய வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமாகி பல பார்வைகளைப் பெற்றுள்ளது.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Thi Cinemas

சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0