ரம்ஜான் விடுமுறையையொட்டி நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வாகன நெரிசலால் அவதி
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 21:07 PM IST | 110
Follow Us

நீலகிரி அருகே, ரம்ஜான் விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரியின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகள், அதிக அளவில் வருகை தந்தனர். அப்போது, கூடலூர் பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,
அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுவரை இல்லாத அளவிற்கு, அதிக அளவில் வாகனங்கள் வந்ததால், சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல், அவதிக்குள்ளாகினர்
Comments: 0