ராகவா லாரன்ஸ் படத்துல வாய்ப்பு வேணும்னா தன்னை கிஸ் அடிக்க சொன்னார்…. உண்மையை போட்டு உடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!
Written by Ezhil Arasan Published on Jul 29, 2023 | 05:37 AM IST | 76
Follow Us

ராகவா லாரன்ஸ் படத்தில் தற்போது “வெள்ளை வேளேர்னு” என்ற கேரக்டரில் ஒரு இளம்பெண் நடிக்க வேண்டும் என ஆடிஷன்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமான விஜே தீபிகா இந்த ஆடிஷனுக்கு சென்றார். இந்த படத்தில் கருப்பாக இருக்கும் ராகவா லாரன்ஸ்-க்கு வெள்ளையாக ஒரு தங்கச்சி இருக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர் சொன்னார். ராகவா லாரன்ஸின் தங்கை கேரக்டரில் அவர் கச்சிதமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஆடிஷன்கள் போது, தீபிகா நடிக்கும் தங்கச்சி கேரக்டரில் முத்தக் காட்சியில் நடிக்கும்படி இயக்குனர் கேட்டுக் கொண்டார். தீபிகா தன்னிடம் தகாதவாறு பேசுகிறாரே என உணர்ந்து, மேலும் அறையில் வேறு யாரும் இல்லாததால் அத்தகைய காட்சியை செய்ய மாட்டேன் என்று இயக்குனரிடம் கூறி அந்த பட வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டார்.

பின்னர், அந்த படத்தில் இயக்குனர், ராகவா லாரன்ஸிடம் பேசி அந்த காட்சியை படத்தில் இருக்காது என சொல்லியுள்ளார். நீங்கள் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என்று தீபிகாவிடம் மேலும் சொல்லியுள்ளார். தீபிகாவுக்கு முன்பு அவர் ஏற்கனவே எட்டு பேரை ஆடிஷன் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் அவரைக் காட்சிக்காக முத்தமிட்டதாகவும் இயக்குனர் பின்னர் தெரிவித்தார். நீங்கள் மட்டும் அந்த சீன் நடித்து காட்டாமல் இருந்தால் அவர்களுக்கு எல்லாம் செய்யும் துரோகம் ஆகிவிடும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், தீபிகா திரைப்பட வாய்ப்புகளைத் தேடும் போது இதுபோன்ற சங்கடமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source: Cekay Studios
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0