ஜெயிலர் ட்ரெய்லரில் ரஜினி சொன்ன வீச்சு டயலாக்கை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!!
Written by Ezhil Arasan Published on Aug 03, 2023 | 13:35 PM IST | 108
Follow Us

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் ஜெயிலர். பான் இந்தியா திரைப்படமான இந்தப் படத்தில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார, ஜாக்கி ஷெராப், ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு பட தோல்விகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

“ஜெயிலர்” படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது, மேலும் படம் நெல்சன் திலீப்குமாரின் பாணியின் சிறப்பியல்பு அம்சத்துடன் டார்க் காமெடியுடன் ஆக்ஷன் படம் என்பது தெளிவாகிறது. ட்ரெய்லரில் ரஜினிகாந்த் நடித்த அனைத்து மாஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

“ஜெயிலர்” ட்ரெய்லர் ரஜினியின் ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும், மற்றவர்கள் முழுவதுமாக நம்பவில்லை. ரஜினிகாந்தின் முந்தைய கதாபாத்திரங்களான “பீஸ்ட்” மற்றும் “பாட்ஷா” போன்ற மற்ற படங்களுடனும், “விக்ரம்” படத்துடனும் சிலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இனி வீச்சுதான். pic.twitter.com/HfwcsOmvQw
— Blue Sattai Maran (@tamiltalkies) August 2, 2023
ப்ளூ சட்டை மாறன் ரஜினியின் டிரைலரை நக்கலுடன் ட்வீட் செய்துள்ளார். ட்ரெய்லரில், ரஜினிகாந்த், ஒரு அளவுக்குத்தான் நமட்ட பேச்சு அதுக்கப்புறம் வீச்சுதான் என சொல்வார். அதனை கலாய்க்கும் விதமாக பரோட்டா புகைப்படத்தை பதிவிட்டு முட்டை பரோட்டா வீச்சு என ட்வீட் செய்துள்ளார்.
ட்ரெய்லரில், பூனை போல் இருப்பார்கள், திடீரென்று புலியாக மாறிவிடுவார்கள் என டயலாக் வரும் . அதனை கலாய்க்கும் விதத்தில் ப்ளூ சட்டை மாறன், யார் அந்த புலி?’ ‘சண்டைக்காட்சில டூப் போடறவர்’ ‘அப்ப பூனை?’ ‘Self Troll’ என கூறியுள்ளார்.
'யார் அந்த புலி?'
'சண்டைக்காட்சில டூப் போடறவர்'
'அப்ப பூனை?'
'Self Troll' pic.twitter.com/yUin8bZJB3
— Blue Sattai Maran (@tamiltalkies) August 2, 2023
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்தே ரஜினியை தொடர்ந்து மாறன் கலாய்த்துவருகிறார். தற்போது ட்ரெய்லரை வைத்தும் அவர் நக்கல் அடிக்க தொடங்கியிருக்கிறார். அவரது ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பதிலடியும் கொடுத்துவருகின்றனர்.
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
இந்த வீச்ச விட கம்மி தான் pic.twitter.com/pO9bljPraw
— Sachin Anbu (@ASivanraji) August 2, 2023
Definitely sir don't go out in public!
— senthilkumar (@aathisenthil) August 2, 2023
Actors, Directors'a விட உங்களுக்கு இந்த fans'a வம்புக்கிழுத்து குதூகலம் அடையுறீங்க பார்த்தீங்களா? உங்கள வச்சே ஒரு வித்தியாசமான psycho thriller எழுதலாம்! 😀
— Ilango Sivanthi (@sivanthiilango) August 2, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0