விரைவில் ‘பஞ்ச தந்திரம் 2’ தொடங்கப்படுமா? – சஸ்பென்ஸை உடைத்த நடிகை!!
Written by Ezhil Arasan Published on Aug 12, 2023 | 11:28 AM IST | 493
Follow Us

கமல்ஹாசனின் மிகப் பெரிய ஹிட் படம் ஒன்று “பஞ்சதந்திரம்”. காமெடி காட்சிகளை இன்னும் கூட ரசிகர்கள் கொண்டாடடி வருகின்றனர். இதை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

ஏற்கணமே கமல்ஹாசன் நடித்த “விஸ்வரூபம் 2ம் பாகம்” வெளியாகியது. தற்போது, “இந்தியன்” படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார்கள்.
“பஞ்சதந்திரம்” படத்தின் சில நடிகர்கள் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அந்த படத்தில் நடித்த ஸ்ரீமன் ட்விட்டரில், “பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் வருமா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். அதை கமல்ஹாசன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து இதில் நடித்த ரம்யாகிருஷ்ணனும் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் எடுக்க விருப்பத்தை உறுதி செய்துள்ளார்.
'பஞ்சதந்திரம்' 2-ம் பாகம் எடுக்க நடிகை விருப்பம்…!
விரிவாக படிக்க—>https://t.co/Be5SQlDQF0#Panchatanthiram #Panchathanthiram2 #KamalHaasan #RamyaKrishnan #Simran #Dailythanthi #CinemaNews #Dtnews #DT
— DailyThanthi (@dinathanthi) August 12, 2023
Source – Daily Thanthi
அதாவது அவர் கூறியது, “கமலுடன் எந்த வேடத்திலும் எனக்கு நடிக்க பிடிக்கும் என்பதால் முதல் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். எனது கதாபாத்திரத்தின் கதை முடிவடையவில்லை, எனவே எனக்கு பஞ்சதந்திரத்தின் இரண்டாம் எடுக்க வேண்டும். இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்,” என்றார்.


சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0