ரகசிய திருமணம் செய்துகொண்டாரா ராஷ்மிகா?? அவரே சொன்ன வீடியோ வைரல்!!
Written by Ezhil Arasan Published on Jul 27, 2023 | 05:18 AM IST | 66
Follow Us

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தியிலும் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்குகிறார். தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார்.
கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தெலுங்கில் பிரபலமானார்.

பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா கண்ணா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ படத்தில் நடித்து வருகிறார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ள இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இது தவிர தெலுங்கில் ‘புஷ்பா 2’ மற்றும் தமிழில் ‘வானவில்’ படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், அது கார்ட்டூன் கதாபாத்திரமான நருடோ என்றும் கூறினார்.ராஷ்மிகாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Lehren TV
குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனக்கு நருடோ பிடிக்கும் என நடிகை ராஷ்மிகா கூறியுள்ள இந்த செய்தி இணையத்தில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0