வயதில் அரைசதம் அடித்த சச்சின் குவியும் வாழ்த்து மழை Sachin Tendulkar
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 11:25 AM IST | 110
Follow Us

கிரிக்கெட் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கரின், ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு, cricket பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட, பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Master blaster என அழைக்கப்படும், சச்சின் டெண்டுல்கர், இன்று தனது, ஐம்பதாவது பிறந்தநாளை, கொண்டாடி வருகிறார்.
இதனையொட்டி, அவருக்கு cricket வீரர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர், வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், Twitterல் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், அமைதி, மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெற்று, மேலும் ஏராளமான இளைஞர்களுக்கு, முன் உதாரணமாக திகழ, வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒடிசா மாநிலம், புரி கடற்கரையில், பிரபல மனசிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் மூலம், சச்சினுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை, தெரிவித்துள்ளார்
Comments: 0