பணம் நெருக்கடி… இந்த நடிகரிடமிருந்து சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா?
Written by Ezhil Arasan Published on Aug 05, 2023 | 03:24 AM IST | 1000
Follow Us

மயோசிடிஸ் சிகிச்சைக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் சமந்தா ரூ.25 கோடி கடன் வாங்கியதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் வதந்தி பரவி வருகிறது.

ஆயிரக்கணக்கான கோடி சொத்து உடைய நாகார்ஜுனா குடும்பத்தில் மருமகளாக போன சமந்தா, கணவரைப் பிரிந்தபோது ஜீவனாம்சம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக என்றும் கூறப்படுகிறது.
வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சமந்தா தனது மயோசிடிஸ் சிகிச்சைக்காக எந்த கடனும் வாங்கவில்லை என்று தனது சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். தனது வெற்றிகரமான வாழ்க்கையின் காரணமாக பண ரீதியாக தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்று அவர் முன்னேடுத்து வைத்துள்ளார். மேலும், மயோசிடிஸ் சிகிச்சைக்கு இவ்வளவு பெரிய பணம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மயோசிடிஸ் என்பது பலரைப் பாதிக்கும் ஒரு நோயாகும், மேலும் இந்த நோய்க்கு இவ்வளவு பெரிய பண தொகை சிகிச்சைக்காக தேவைப்படாது என கூறியுள்ளார். இந்த விளக்கத்தை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு சமந்தா முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளார்.

கீழே உள்ள சமந்தா பதிவை பாருங்கள்:

சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0