ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்… பதிலடி கொடுத்த நீலிமா ராணி!!
Written by Ezhil Arasan Published on Sep 12, 2023 | 19:05 PM IST | 27653
Follow Us

நடிகை நீலிமா ராணி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, ஒருவர் செக்ஸ் குறித்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை நீலிமா ராணி பளீர் ரிப்ளை அளித்துள்ளார்.

நீலிமா ராணி பொழுதுபோக்கு துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் குழந்தை நடிகராகத் தொடங்கி 2001 இல் “மெட்டி ஒலி” என்ற தொலைக்காட்சித் தொடரில் சக்தியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மேலும் கோலங்கள், அத்தி பூக்கள், தென்றல் என ஏராளமான சீரியல்களில் நடித்த நீலிமா, ஒரு கட்டத்தில் வில்லி வேடங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

சீரியலில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி சினிமா பக்கமும் தலைகாட்டி வந்த நீலிமா, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா, குற்றம் 23, யாழ், கஜினிகாந்த், ருத்ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக, அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் மற்றும் அவரது தொலைக்காட்சி வாழ்க்கையுடன் திரைப்பட பாத்திரங்களையும் ஏற்றார்.

இவர் தன்னை விட 11 வயது மூத்த இசைவாணன் என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் கூட சென்னையில் அழகு சாதன நிலையம் ஒன்றை புதிதாக தொடங்கினார் நடிகை நீலிமா. பாடகர் எஸ்.பி.பி. சரண் தான் அந்த அழகு நிலையத்தை திறந்து வைத்தார்.

அவர் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடியபோது, ஒரு நபர் செக்ஸ்ல உங்களுக்கு என்ன பொசிஷன் பிடிக்கும்? ஒரு மாதத்திற்கு எத்தனை முறை பண்றீங்க என மிகவும் ஆபாசமாக கேள்வியை கேட்டிருந்தார்.
இதைப்பார்த்து கோவமான நடிகை நீலிமா, இந்த அறிவு கெட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என பதிவிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Comments: 0