யாருக்கும் தெரியாமல் விஜய் டிவி பிரபலத்தை ரகசிய திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகையா??
Written by Ezhil Arasan Published on Sep 05, 2023 | 10:25 AM IST | 3432
Follow Us

சமீபகாலங்களில் தமிழ் சீரியல் நடிகைகள் மிகவும் பிரபலமாகி பார்வையாளர்களுடன் நெருக்கமாகி வருகின்றனர். அதிகமான மக்கள் சீரியல்களைப் பார்க்கிறார்கள் மற்றும் இந்த பிரபலங்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளனர்.

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான தீபா, “”அன்பே சிவம்”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, மற்றும் “பிரியமான தோழி” தொலைக்காட்சி சீரியலில் நடித்ததற்காக புகழ் பெற்றார்.
சமீபகாலமாக அவர் குறித்த சில ரகசிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சீரியல் நடிகையான தீபாவுக்கு முதல் திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். ஆனால் சில காரணங்களால் விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
முதல் கணவரிடமிருந்து முறையான விவாகரத்துக்குப் பிறகு, தீபா இப்போது ரசிகியமாக சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றியவர் சாய் கணேஷ்.

சின்னத்திரை பகுதியில் இவரை பாபு என்றே அழைக்கின்றனர். தீபாவின் மறுமணத்துக்கு பாபு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ரகசியமாக மறுமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
தீபா தற்போது தனது மறுமணம் குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram

Comments: 0