சைஸ் என்ன? – ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு நடிகை ஷாலு ஷம்மு பதிலடி!!
Written by Ezhil Arasan Published on Aug 31, 2023 | 17:57 PM IST | 623
Follow Us

நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட நபரிடம் வெளுத்து வாங்கிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

பொன்ராம் இயக்கத்தில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்த நடிகை தான் ஷாலு ஷம்மு. மேலும் இவர் தெகிடி, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இரண்டாம் குத்து, பவுடர் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், நடிப்பின் மூலம் இவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி தோற்றத்தில் குதித்தார் ஷாலு ஷம்மு.
இன்ஸ்டாகிராமில் எப்பயும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களையும், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

ஷாலு ஷம்முவின் அதிக கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் அவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கினறனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஷாலு ஷம்மு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தன்னுடைய காஸ்ட்லியான ஐபோனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடைய நண்பர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறி இருந்தார்.

அவர் சந்தேகப்பட்ட படியே அவரது நண்பர் தான் அந்த ஐபோனை திருடி இருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் ஆதங்கத்தை ஷேர் இருந்தார் ஷாலு ஷம்மு.
இந்த நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ஷாலு ஷம்மு, அப்போது தன்னிடம் அரசியல் தவிர்த்து எந்த கேள்வினாலும் கேளுங்க என சொல்ல, அதற்கு ஒருவர் உங்க மார்பு சைஸ் என்ன என மிகவும் ஆபாசமாக கேள்வியை கேட்டிருந்தார்.

இதனை பார்த்து கோவமான ஷாலு ஷம்மு, உன்னுடையதை விட பெரியதுதான் என அவர் பாணியிலேயே அவருக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார். ஷாலு ஷம்முவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற நபர்களுக்கு இப்படி தான் ரிப்ளை கொடுக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Comments: 0