அதிதிக்கு விரைவில் கல்யாணமா? ஷங்கர் போட்ட கண்டிஷன்!!
Written by Ezhil Arasan Published on Aug 08, 2023 | 03:22 AM IST | 648
Follow Us

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை அதிதியை திருமணம் செய்து வைக்கும் முடிவில் உள்ளாராம். அவருக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஷங்கர். இவருக்கு எப்படி ஒரு மகளா என பலரும் ஆச்சர்யத்துடன் கேட்ட ஒருவர் தான் அதிதி. தான் ஷங்கரின் மகள்னு என அலட்டிக் கொள்ளாமல் எல்லாருடனும் நட்பாக பழகுவது, அனைவரிடமும் கேஷுவலாக பேசுவார் அதிதி. இவர் குறும்புக்காரத்தனம் என்று பெயர் பெற்றவர். “விருமன்” மற்றும் “மாவீரன்” போன்ற படங்களின் புரமோஷனில்
போது அவர் செய்த குறும்புகள் மக்களுக்கு நினைவிருக்கிறது.
அதிதி இப்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வருகிறார. இவர் திரையுலகில் நுழைந்ததும், அவரது தந்தை ஷங்கர் இரண்டு படங்களில் நடிக்க மட்டுமே அனுமதித்தார். ஆனால் அதிதி இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து தன்னை நிரூபித்தபோது, ஷங்கர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

ஷங்கர் அதிதிக்கு இரண்டு வருட அவகாசம் கொடுத்திருக்கிறார். அந்த இரண்டு வருடங்களுக்குள் அதிதி எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் அந்த இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் கண்டிஷன் போட்டுள்ளாராம்.
அதிதி, தனது தந்தையின் வார்த்தைகளைத் திரும்பச் சொல்லாதவர், தற்போது “செம்ம பிசி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அதர்வாவின் சகோதரரான ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குநர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்திற்கு பிறகு, “ராட்சசன்” இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் முன்னணி நடிகையாக அதிதி நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னும் இரண்டு வருடங்களில் பல படங்களில் நடிக்க அதிதி திட்டமிட்டுள்ளார்.

Source – Cineulagam
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0