நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைர மோதிரமா..? தமன்னா பதில்!!
Written by Ezhil Arasan Published on Jul 27, 2023 | 03:33 AM IST | 37
Follow Us

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு வயபரி, கொலை, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை தமன்னா தனது கையில் பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இது உலகின் 5வது பெரிய வைரம் என்றும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் தமன்னாவின் நடிப்பைப் பார்த்த நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, நடிகை தமன்னாவுக்கு பரிசளித்தார் என்றும் வதந்தி பரவியது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்பட்டது.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த செய்தியை நடிகை தமன்னா உடனடியாக மறுத்தார். இது வெறும் ‘பாட்டில் ஓபனர்’, வைரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
அவரது பதிவை கீழே பாருங்கள்:

சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0