மகள்களை கிண்டல் செய்த இளைஞர்கள் தட்டிக் கேட்ட தந்தைக்கு கத்திக் குத்து.
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 02:56 AM IST | 120
Follow Us

லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த, சுந்தரேசன், வள்ளி தம்பதிக்கு, லில்லி, சத்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும், வாலாஜாபேட்டையில் உள்ள, அறிஞர் அண்ணா, அரசினர் மகளிர் கலை மற்றும் அரசியல் கல்லூரியில், BSc maths படித்து வருகின்றனர். இந்த நிலையில், லில்லி மற்றும் சத்யா ஆகிய சகோதரிகள்,
கல்லூரியை முடித்துவிட்டு, நேற்று மாலை, வீடு திரும்பி, வந்து கொண்டிருந்தனர். அப்போது, லால்பேட்டை பெருமாள் கோவில் அருகே நின்றிருந்த, அப்பகுதியை சேர்ந்த, அஜித் சரண் ஆகிய இரண்டு இளைஞர்கள், லில்லி மற்றும் சத்தியாவினை கிண்டல் செய்து, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற, லில்லி மற்றும் சத்யா ஆகிய இருவரும், அவர்களது பெற்றோர்களான, வள்ளி சுந்தரேசன் ஆகியோரிடம், இளைஞர்கள் கிண்டல் செய்தது குறித்து, புகார் தெரிவித்திருக்கிறார்கள்
சொன்னதைக் கேட்டு, கோபம் கொண்ட வள்ளி சுந்தரேசன் இருவரும், கிண்டல் செய்து, தகராறில் ஈடுபட்ட, அஜித் மற்றும் சரண் ஆகிய இருவரிடம் சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம், ஒரு கட்டத்தில், இரு தரப்பினருக்கிடையே, கைகலப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில்தான், இளைஞர்களில் ஒருவரான அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, சுந்தரேசனின் தலையில், பலமாக தாக்கிவிட்டு, நண்பர் சரவணனுடன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தலையில், பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுந்தரசனை, பொதுமக்கள் மீட்டு,
அரசு தலைமை மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, வேலூர் அரசு, அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு, சுந்தரேசன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து
இதனைத் தொடர்ந்து, SIPCOT காவல்துறையினர், சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடி, தலைமறைவாக உள்ள, அஜித் மற்றும், சரண் ஆகிய, இரண்டு நபர்களை, தேடும் பணியில், தீவிரமாக, ஈடுபட்டு வருகின்றனர்.
Comments: 0