கீழடி அருங்காட்சியகத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் Udhayachandran Sivagangai
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 07:25 AM IST | 65
Follow Us

சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளை, மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரசு முதன்மை செயலாளர், உதயசந்திரன் தெரிவித்துள்ளார். கீழடி அருங்காட்சியகத்தை, தமிழக அரசின், முதன்மை செயலாளர், உதயசந்திரன், நேரில், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய, அவர்,
பொதுமக்களின் வசதிக்காக, அருங்காட்சியக நுழைவு சீட்டு பெறுவதற்கு, வலைத்தளம் வழியாக, பணம் செலுத்தும் முறைகள், சுற்றுலா பயணிகளின் பொருட்களை, பாதுகாப்பதற்கான, பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும் என கூறினார். அருங்காட்சியகத்தில், நிறுவப்பட்ட பொருட்களில், மாதிரி வடிவ பொருட்களை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்,
அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும், அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வார இறுதி நாட்களில், தற்போது உள்ள நிறத்தை விட, கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரித்திடவும், பொதுமக்களின் வருகையைப் பொறுத்து, குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்
அருங்காட்சியகத்தில் உள்ள, ஒவ்வொரு பிரிவிலும், அவைகள் சார்ந்த புத்தகங்களை, நிறுவுவதற்கும், மற்றும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில், இயங்கி வரும், சிற்றுண்டி உணவகத்தின் மூலம், வழங்கப்படும், உணவுப் பொருட்களை,
தரமான முறையில், பொதுமக்களுக்கு வழங்கிடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்
Comments: 0