இனி மதுவிற்கு தடை இல்லை! அரசு கொண்டு வரும் புது நடைமுறை
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:01 AM IST | 60
Follow Us

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில், ஏற்கனவே clubகள் மற்றும் நட்சத்திர hotelகளுக்கு மட்டுமே, மதுபானம் விற்க, உரிமம் வழங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும், மதுபானம் பரிமாறுவதற்கு, உகந்த உரிமம் வழங்க வசதியாக, தமிழ்நாடு மதுபானம் விதிகளில், தமிழ்நாடு அரசு, திருத்தம் செய்திருக்கிறது
இது குறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், சிறப்பு அனுமதி பெற்று, மது பரிமாறலாம்
ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிறப்பு அனுமதி பெற்று, மது விருந்து பரிமாறலாம். இதற்கு, மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு துணை ஆணையர், சிறப்பு அனுமதியை, வழங்குவார்கள். PL two எண்ணும் சட்டத்தின், சிறப்பு அனுமதி பெற்று, மதுவிருந்து நிகழ்ச்சிகள், நடத்தப்படலாம் எனவும், குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், TASMAC
தவிர, பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த, மதுபானங்கள், இனி, திருமணம், மற்றும், விளையாட்டு கூடங்களிலும், பயன்படுத்த, அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு தொடர்பான, கட்டுப்பாடுகளில், அந்தந்த பகுதியில் உள்ள, காவல்துறையினர்,கண்காணிக்கலாம் எனவும், அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு அனுமதிக்கு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது
Comments: 0