Tamil Nadu முழுவதும் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை Tn Rain
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 04:12 AM IST | 57
Follow Us

தமிழ்நாடு முழுவதும், பரவலாக பல இடங்களில், கனமழை பெய்தது. கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், பெய்த கனமழையால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மதுரையில், இரவு முழுவதும் பெய்த கனமழையால், திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்கியது. வெள்ளம் வடிய, நீண்ட நேரம் ஆனதால், அந்த வழியாக வந்த அரசு பேருந்து, அங்கு பழுதாகி
தகவல் அறிந்து போக்குவரத்து துறையினர் மீட்பு வாகனத்தின் மூலம் அந்த பேருந்தை மீட்டுச் சென்றனர்
கரூர் மாவட்டம், குளித்தலை சுற்றுவட்டாரத்தில், அரை மணி நேரத்திற்கு மேலாக, கனமழை பெய்தது. திருவள்ளூர் பகுதியில், மூன்றாவது நாளாக, விட்டு விட்டு மழை பெய்தது. வெப்பம் தணிந்த இதமான சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை, மண்ணம்பந்தல், சங்கர
பெரம்பூர், குமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. சம்பா, தாளடி விவசாயம் முடிந்து, வயல்களில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த மழை பயனுள்ளதாக அமைந்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஆகிய பகுதிகளில், கடந்த சில தினங்களாக, கோடை வெயில், சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவ
ராமநாதபுரத்தில், காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென, அரை மணி நேரமாக, மழை வெளுத்து வாங்கியது.
Comments: 0