விடாமுயற்சி படத்திலிருந்து விலகிய திரிஷா… திரிஷாவுக்கு பதில் களமிறங்கும் டாப் நடிகை!
Written by Ezhil Arasan Published on Jul 31, 2023 | 11:29 AM IST | 87
Follow Us

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் படம் “விடாமுயற்சி”. அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வந்தாலும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மொத்த படப்பிடிப்பையும் வெளிநாட்டிலேயே நடத்த வேண்டும் என்று அஜித் வலியுறுத்தியுள்ளார்.
நாயகியாக த்ரிஷா நடிப்பதாக முதலில் செய்திகள் வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் தனது உலக பைக் பயணத்தை தொடரவுள்ளார். இந்த திட்டத்திற்கு பிறகு அவர் ஒரு வருட காலம் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுப்பார் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே, “விடாமுயற்சி” படத்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.



Source: Thanthi tv
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0