விஜய் – சூர்யா பட இயக்குனருக்கு மாரடைப்பா? திடீரென மருத்துவமனையில் அனுமதி!!
Written by Ezhil Arasan Published on Aug 08, 2023 | 03:28 AM IST | 1467
Follow Us

விஜய், சூர்யாவை முக்கிய நடிகர்களாக வைத்து மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் விஜய், சூர்யாவை வைத்து ‘பிரண்ட்ஸ்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய சித்திக் தான் அந்த இயக்குநர்.
அதன் பிறகு விஜயகாந்த் வைத்து வைத்து ‘எங்கள் அண்ணா’, பிரசன்னா, அப்பாஸை வைத்து ‘சாது மிரண்டால்’, விஜய்யை வைத்து ‘காவலன்’, அரவிந்த் சுவாமியை வைத்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என பல படங்களை இயக்கினார் சித்திக். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், சித்திக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. அவர் இப்போது ECMO எனப்படும் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சமூக ஊடகங்களில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Cineulagam
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0