ஷாருக்கான் பட விழாவில் கலந்து கொள்ளப்போகும் விஜய்??
Written by Ezhil Arasan Published on Aug 19, 2023 | 03:29 AM IST | 187
Follow Us

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லி, தற்போது ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் யோகி பாபு, தீபிகா படுகோன், பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத். ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பல நகரங்களில் புரொமோஷனுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது, மேலும் படத்தில் உள்ள அனைவரும் இந்த புரொமோஷனுக்கு பங்கேற்பார்கள். சமீபத்தில் நடிகர் விஜய்யும் சென்னையில் ‘ஜவான்’ படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

‘ஜவான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் கலந்துகொள்ள போகிறார் என இந்த செய்தி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source – Malaimalar
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0