நடிகை நயன்தாரா பட ப்ரமோஷன்களில் பங்கேற்க வேண்டும் – நடிகர் விஷால் கருத்து!!
Written by Ezhil Arasan Published on Jul 28, 2023 | 07:11 AM IST | 34
Follow Us

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா, அபரபவன் அசராதவன், அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.

மேலும் இப்படத்தில் ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இப்படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில், நடிகர் விஷால் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டபோது, படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால், திரைப்பட விளம்பரங்களில் பங்கேற்காமல் இருப்பது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
நடிகர்கள் தானாக முன்வந்து விளம்பரங்களில் சேர்வது பரவாயில்லை, ஆனால் அவர்கள் விரும்பவில்லை என்றால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் அவர் கூறினார்.
#CinemaUpdate | நடிகை நயன்தாரா பட ப்ரமோஷன்களில் பங்கேற்றால் நல்லா இருக்கும் -நடிகர் விஷால்#SunNews | #Nayanthara | @VishalKOfficial pic.twitter.com/w5DYid0hFI
— Sun News (@sunnewstamil) July 27, 2023
Source – SunNews
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0