27 வயது இளம் நடிகையுடன் விஷால்-க்கு திருமணமா??
Written by Ezhil Arasan Published on Aug 09, 2023 | 19:10 PM IST | 1603
Follow Us

45 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனி மனிதனாக வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வார்கள் என்றார்.

ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கு முன் சரத்குமாரின் மகள் வரலட்சுமியுடன் விஷால் காதல் வயப்பட்டு வந்தார். ஆனால், நடிகர் சங்கத் தேர்தலின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும், வரலட்சுமி தனது தந்தை சரத்குமாரை விமர்சித்ததாலும் அவர்களது உறவில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சம்பவங்கள் எல்லாம் விஷாலுக்கு திருமணம் செய்துகொள்ளும் போது நிறைய தடைகளை உருவாக்கியது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, அவர் தனது நடிப்பு வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து முடித்த அவர், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவும் முயற்சி செய்தார்.

தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் விஷால் நிஜமாகவே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் 27 வயது நிரம்பிய இளம் நடிகையை திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஷால் ஒரு சில படங்களில் அவருடன் பணிபுரிந்த நடிகையான லட்சுமி மேனனுடன் காதல் தொடர்பு வைத்திருப்பதாக சில வதந்திகள் வந்தன. லட்சுமி மேனன் சிறிது காலம் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்ததால் அந்த வதந்திகள் மறைந்தன. ஆனால் தற்போது விஷாலுக்கு திருமணம் நடைபெறுவதாக பேசப்படுகிறது.

ஆனால் தற்போது லட்சுமி மேனன் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், அந்த பேச்சு வார்த்தையில் விஷாலுக்கும் இவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற பேச்சு நடைபெற்று வருவதாக எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இது உண்மையா அல்லது வழக்கமான வதந்தியா என்பதில் பல குழப்பங்கள் உள்ளன.


Source – Zee News
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0